வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 23 ஜூன் 2020 (19:00 IST)

மீண்டும் சுமார் மூஞ்சிக் குமார் ஆகவுள்ள விஜய் சேதுபதி...

இயக்குநர் கோகுல் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
 

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சுமார் மூஞ்சி குமார் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். அவருடன் அஸ்வின், நடிகை  நந்திதா போன்றோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், கோகுல் கொரோனா குமார் என்ற படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு கலகலப்பான வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும்  தகவல் வெளியானதால் அவரது ரசிகரள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை அடுத்து காஸ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை கோகுல் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.