வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 6 ஜூன் 2020 (15:59 IST)

ஒரு கை பார்த்திடலாம்... ரீஎன்ட்ரி கொடுக்கும் ரோஜா - அதுவும் விஜய் சேதுபதியுடன் வில்லியா...?

நடிகர் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இது தவிர தெலுங்கில் உப்பண்ணா என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படி ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் நடித்து நடிகர்களை தொடர்ந்து மிரட்டி எடுத்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் அடுத்ததாக நடிக்கும் " புஷ்பா" என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை ரங்கஸ்தலம் வெற்றி இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை குறித்த ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தில் நடிகை ரோஜா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் சுமார் 5 வருடங்களுக்கு பின்னர் ரோஜா திரைத்துறைக்கு ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.  மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவு செய்கிறார்.