திங்கள், 11 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 28 மே 2020 (22:57 IST)

விஜய் சேதுபதி படத்தில்….இலங்கை அகதியாக நடிக்கும் பிரபல நடிகை

பைவ் ஸ்டார், எதிரி, வரலாறு உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை கனிகா. இவர் அதன்பின் நீண்டகாலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதியின் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் இலங்கை அகதி வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் விஜய்சேதுபதி  யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை, அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோஹந்த் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், நடிகை கனிகா இலங்கை அகதியாக நடிக்கிறேன் என்ற ரகசியத்தை அண்மையில் கனிகா கசியவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.