வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (23:58 IST)

விஜய் சேதுபதி நடத்தில் நடிகராக அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர்

நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பதன் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகவுள்ளார் ஸ்ரீசாந்த்.

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில், அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லலித் தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட படம்தான் காத்து வாக்குல ரெண்டு காதல்.

 இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசந்த்  நடித்துள்ளார்.






















இன்று   ஸ்ரீசந்த்-ன் பிறந்த நாளை முன்னிட்டு காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழு அவரது போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்ரீசந்த் முகமது மொபி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது