1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (19:25 IST)

ஏலத்தின்போது என்னையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்: ஸ்ரீசாந்த் வேண்டுகோள்

ஐபிஎல் ஏலத்தின் ஏலத்தின்போது என்னையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என ஸ்ரீ சாந்த் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் மீது சூதாட்ட புகார் ஏற்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு தடை விதிக்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது 2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் விடப்பட்ட வீரர்களின் பட்டியலில் ஸ்ரீசாந்த் இடம்பெற்றுள்ள நிலையில் இறுதி ஏலத்திற்கான உள்ள என்னுடைய பெயரையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் உங்கள் அனைவருக்கும் நன்றி சொன்னால் அது போதுமானதாக இருக்காது என்றும் உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.