வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (15:00 IST)

பா.ரஞ்சித் இயக்கத்தில் விஜய் சேதுபதி?

இயக்குநர் பா.இரஞ்சித்தின் "கூகை திரைப்பட இயக்கம்" , உதவி இயக்குநர்கள், "96"படக்குழுவினருடன் கலந்துரையாடும்  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தநிகழ்ச்சி கூகை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இதில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன்எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள் , பா.ரஞ்சித்இயக்கத்தில் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்டனர்.
 
அதற்கு விஜய்சேதுபதி, "இந்த கேள்வியே தவறு. கதை பிடித்திருந்தால் யார்இயக்கினாலும் நடிப்பேன். ரஞ்சித் எனக்கு நல்ல நண்பர். காலா பார்த்து விட்டுஅவரை பாராட்டினேன். இந்த புண்ணியத்துக்கு நீங்க ரொம்ப நாள் வாழ்வீங்க தலைவாஎன்று கூறினேன். உடல் தான் நம் ஆயுதம் என்று வசனம் ஒன்று வரும். உழைக்கும்வர்க்கத்திலிருந்து வந்த ஒருவனால்தான் இப்படி ஒரு வசனம் எழுத முடியும்"இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.