ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (18:11 IST)

பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் அடுத்த படத்தின் டைட்டில் இதுதான்

பிக்பாஸ் 1 மற்றும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்குமே கிட்டத்தட்ட திரையுலகில் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த ஹரிஷ் கல்யாணும், பிக்பாஸ் ரைசாவும் நடித்த 'பியார் பிரேமா காதல்' நல்ல வெற்றியை பெற்றது.

இதனையடுத்து ஹரிஷ்கல்யாண், இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் 'இஸ்பாட் ராஜாவும் இதய ராணியும்' என்பபதுதான். இந்த டைட்டில் அறிவிக்கப்பட்ட ஒருசில நிமிடங்களில் டுவிட்டரில் டிரெண்ட் ஆரம்பித்து இப்போது வரை அந்த டிரெண்ட் நீடித்து வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர். ஷில்பா மஞ்சுநாத், விஜய் ஆண்டனி நடித்த 'காளி' திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.