திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 12 அக்டோபர் 2018 (12:36 IST)

விஜய் சேதுபதியின் புதிய கெட் அப்

தலைப்பாகை, நீளமான முடி.... விஜய் சேதுபதி- சுதீப் இணைந்திருக்கும் `சயீரா நரசிம்ம ரெட்டி' புகைப்படம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, சுதந்திர போராட்ட வீரர் 'சயீரா நரசிம்ம ரெட்டி'யின் வரலாற்று கதை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகிவருகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம்  என நான்கு மொழிகளில் அடுத்த வருடம் திரைக்கு வருகிறது. இதில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். இவருடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ' சுதீப் என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் விஜய்சேதுபதியும் கிச்சா சுதீப்பும் சமீபத்தில் இணைந்தனர். இவர்கள் இருவரும், அவர்களது கெட்டப்பிலிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிது. ராஜா நர்சிம்ம ரெட்டியின் `விசுவாசி ஓபயா' எனும் கதாபாத்திரத்தில் நடித்துவரும் விஜய்சேதுபதி, தமிழ் பேசி நடித்து வருகிறார்.