புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (17:39 IST)

திருமுருகன் காந்தியை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியாகி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தியை இயக்குனர் பா ரஞ்சித் இன்று சந்த்தித்துள்ளார்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு உட்பட 23 வழக்குகள் போடப்பட்டு 55 நாட்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அவர் வேலூர் சிறையில் இருந்த போது மோசமான உணவு மற்றும் சுகாதாரமில்லாத தனிமைச்சிறை காரணமாக அவரது உடல்நிலை சரியில்லாமல் இரண்டு முறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வழக்குகளில் இருந்து ஜாமீனில் வெளிவந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளும்படி வலியுறுத்தினர். அதனை ஏற்று அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனியில் தங்கி ஒருவாரமாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அவரை திமுக தலைவர் ஸ்டாலின், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் மருத்துவமனைக்கு சென்று திருமுருகன் காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது திருமுருகன் காந்தியின் உடல் நலம் குறித்தும் சிறையில் அவர் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்தும் ரஞ்சித் கேட்டு அறிந்து கொண்டதாக தெரிய வருகிறது. இந்த சந்திப்பின் போது பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜும் உடனிருந்தார்.