1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (20:23 IST)

அதிக பட்ஜெட்டில் தயாராகும் விஜய் சேதுபதி படம்

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஜுங்கா’, இதுவரை அவர் நடித்ததிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட இருக்கிறது.


 

 
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி – கோகுல் இணையும் படம் ‘ஜுங்கா’. பாரிஸில் வாழும் டானாக இந்தப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக நடிக்கும் சாயிஷா, பாரிஸில் பிறந்து, வளர்ந்த பெண்ணாக நடிக்கிறார்.
 
எனவே, படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரிஸில் படம்பிடிக்கப்பட இருக்கின்றன. அதனால், படத்தின் பட்ஜெட்டும் எகிறியிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு, முதன்முறையாக 20 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. பட்ஜெட் அதிகம் என்பதால், அந்த ரிஸ்க்கையும் சொந்த செலவிலேயே எடுக்கிறார். இதற்கு முன்னர் ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார் விஜய் சேதுபதி.