செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2017 (15:18 IST)

நயன்தாராவுடன் மோதும் விஜய் சேதுபதி

நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த படங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன.



 
ஆயுத பூஜை ரிலீஸில் இருந்து சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ விலகிக்கொள்ள, அதில் எப்படியாவது இடம்பிடித்துவிட பல படங்கள் போட்டி போடுகின்றன. நீண்ட நாட்களாகக் காத்திருப்பில் வைக்கப்பட்ட நயன்தாராவின் ‘அறம்’ படம் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’, விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’, கெளதம் கார்த்திக்கின் ‘ஹர ஹர மஹாதேவஹி’, ஜி.வி.பிரகாஷின் ‘செம’, ஜெய்யின் ‘பலூன்’, பாபி சிம்ஹாவின் ‘திருட்டுப்பயலே 2’ ஆகிய படங்களும் ஆயுத பூஜை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகின்றன. மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படமும் அன்றுதான் ரிலீஸாகிறது.