1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (15:53 IST)

பாயும் அரவிந்த் சாமி… பதுங்கும் மாதவன்

அடுத்தடுத்து பல படங்களில் அரவிந்த் சாமி கமிட்டாக, மாதவனோ ரொம்ப ரொம்ப யோசித்தே படங்களை ஒப்புக் கொள்கிறார்.



 
ஒருகாலத்தில் பெண்களின் கனவுக் கண்ணனாக, சாக்லேட் பாயாக வலம் வந்தவர்கள் அரவிந்த் சாமியும், மாதவனும். தமிழில் சில வருடங்கள் இடைவெளி விட்ட இருவரும், தற்போது ரீஎன்ட்ரி ஆகியிருக்கின்றனர்.

அரவிந்த் சாமி ரீஎன்ட்ரியான ‘கடல்’ நன்றாகப் போகாவிட்டாலும், ‘தனி ஒருவன்’ மற்றும் ‘போகன்’ படங்கள் அவரைப் பிஸியாக்கி விட்டன. ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘வணங்காமுடி’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘நரகாசூரன்’ என தற்போது கைவசம் 4 படங்களை வைத்திருக்கிறார் அரவிந்த் சாமி. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தயாரிப்பு நிலையில் உள்ளன.

மாதவன் ரீஎன்ட்ரியான ‘இறுதிச்சுற்று’ சூப்பர் ஹிட்டானாலும், அடுத்த படத்தை நிதானமாகவே ஒப்புக் கொண்டார். விஜய் சேதுபதியுடன் நடித்த ‘விக்ரம் வேதா’ படம்தான் அது. அந்தப் படமும் சூப்பர் ஹிட்டானாலும், இதுவரை அடுத்த படத்தை ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார்.