செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 15 ஆகஸ்ட் 2018 (16:34 IST)

நயன்தாராவுடனான லிப்-லாக்! கசிந்தது இப்படித்தான்: சிம்பு ஓபன் டாக்..

நடிகர் சிம்பு எதையும் வெளிப்படையாக பேசுவதால், அவருக்கு அதுவே பிரச்னையாக பல நேரங்களில் அமைகிறது. சிம்புக்கு பல நேரங்களில் அவரது எதார்த்தமான பேச்சு மற்றும் செயல்பாடுகளில்  அவரை வம்பில் மாட்டி விடுகிறது.

 
எனினும் மிகத்திறமையான கலைஞனான அவர், வல்லவன் படப்பிடிப்பின் போது  முன்னணி நடிகையான நயன்தாராவை தீவிரமாக காதலித்தார்.
 
இருவரும் நெருக்கமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட  லிப்-லாக் முத்தம்  புகைப்படம்  இணைதளத்தில் வைரலாகியது.  இதனால் இருவருக்கும் இடையே இருந்த காதல் முறிந்தது.
 
அந்த நிகழ்வு குறித்து  சிம்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது:  ‘துபாயின் புது கேமரா வாங்கிய போது அந்த புகைப்படம் எடுத்தோம், ஆனால், அதை யாரோ லீக் செய்துவிட்டார்கள்.
 
அந்த நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது, என்னால் ஒரு பெண் பெயர் கெடுகின்றதே என்று, நான் எந்த பெண்ணிடமும் அவர்கள் அனுமதியில்லாமல் தொட்டது கூட இல்லை’ என்றார்.