1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 27 அக்டோபர் 2021 (09:25 IST)

ரஜினி பேரன்களுக்கு பின் வரிசையில் அமர்த்தப்பட்ட விஜய் சேதுபதி - வைரல் புகைப்படம்!

கடந்த 2019ம் ஆண்டுக்கான திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்துக்கு திரை, ப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
 
இந்த விருது விழாவில் ரஜினியின் மனைவி , மகள் , மருமகன் , பேரன்கள் என ஒட்டுமொத்த குடும்பமும் கலந்துக்கொண்டது. அதில் ரஜினிக்கு பின்னால் அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் அமர்த்தப்பட்டிருந்தார். 

அதையடுத்து ரஜினியின் பேரன்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.  ரஜினியின் பேரன்களுக்கு பின்னால் தான் சிறந்த துணை நடிகருக்கான விருது வாங்கிய விஜய் சேதுபதி அமர்த்தப்பட்டிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.