செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 27 அக்டோபர் 2021 (08:55 IST)

ரெண்டுபேரும் என் சொத்துக்கள்... இவர்களால் உருவாச்சு வரலாற்றின் முத்துக்கள்!

கடந்த 2019ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சினிமாவில் உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது தமிழ் நடிகரான ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டு விருது வழங்கி கௌரவித்தனர்.  
 
அதே விருது மேடையில் நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை வாங்கினார். தந்தை , கணவர் என இருவரும் தேசிய விருது வாங்கியதை எண்ணி ஐஸ்வர்யா தனுஷ் பெருமிதத்துடன் தனது இன்ஸ்டாக்ராமில், இவங்க ரெண்டுபேரும் என் சொத்துக்கள்... இவர்களால் உருவாச்சு வரலாற்றின் முத்துக்கள் என கூறி பதிவிட பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.