முரளிதரன் பயோபிக் – சவாலை ஆவலோடு எதிர்கொள்ளும் விஜய்சேதுபதி !

Last Modified வியாழன், 25 ஜூலை 2019 (13:45 IST)
முரளிதரன் வேடத்தில் நடிப்பது தனக்கு சவாலாக இருக்கும் என்றும் அதை எதிர்கொள்ள ஆவலாகக் காத்திருப்பதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

இந்திய திரையுலகம் இப்போது வாழக்கை வரலாற்றுப் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் அதிகமாக விளையாட்டு வீரர்களின் படங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார்களான தோனி, சச்சின் ஆகியோரின் படங்களை அடுத்து இப்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாக இருக்கிறது.

அதில் முத்தையா முரளிதரனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றதும் அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. இப்படத்தை தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். இந்தப்படத்துக்கு 800 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி ‘முரளியின் கதாபாத்திரம் எனக்கு சவாலாகவே இருக்கப் போகிறது. இந்த சவாலை நான் ஆவலோடு எதிர்கொள்ள இருக்கிறேன். அவர், எங்களுடன் இப்படத்தில் பணியாற்றுவார் என்பதும் அவரே எங்களுக்கு கிரிக்கெட்டின் நுட்பங்களைப் பற்றி அறிவுரை வழங்குவார்’. எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :