முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி !

Last Modified செவ்வாய், 23 ஜூலை 2019 (09:02 IST)
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

இந்திய திரையுலகம் இப்போது வாழக்கை வரலாற்றுப் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் அதிகமாக விளையாட்டு வீரர்களின் படங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார்களான தோனி, சச்சின் ஆகியோரின் படங்களை அடுத்து இப்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாக இருக்கிறது.

அதில் முத்தையா முரளிதரனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்துக்கு 800 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :