வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (18:17 IST)

தளபதியோடு மோதும் மக்கள் செல்வன் – தீபாவளி ரிலீஸ் அப்டேட்

விஜய் நடித்து வெளியாகவிருக்கும் “பிகில்” திரைப்படமும், விஜய் சேதுபதி நடிக்கும் “சங்கத்தமிழன்” திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் “பிகில்”. நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் புதிய இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் “சங்கத்தமிழன்”. ராஷி கண்ணா, நிவேதா பேத்துராஜ் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படமும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் , சிவாஜி காலத்திலிருந்தே நாயகர்கள் போட்டி நடந்து வருகிறது. ரஜினி-கமல், விஜய்-அஜித் என இப்போது வரை நீண்டு கொண்டு செல்கிறது. சமீபத்தில் இந்த நிலை மாறி பிரபல ஹீரோக்களின் வெவ்வேறு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதும் உண்டு. ரஜினியின் “பேட்ட” திரைப்படமும், அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படமும் ஒரே வார இடைவெளியில் ரிலீஸா ஆகி பாக்ஸ் ஆபிஸில் போட்டியிட்டன. தற்போது அதுபோல விஜய் படத்தோடு விஜய் சேதுபதி போட்டி போடுவதாக தெரிகிறது.

விஜய் சேதுபதிக்கு மக்களிடையே அதிக செல்வாக்கு இருந்தாலும் சமீப காலமாக படங்கள் அவ்வளவாக வசூல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பிகில் படத்துடன் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் பாக்ஸ் ஆபிஸில் போட்டி ஏற்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.