ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 ஜூன் 2018 (10:32 IST)

தத்தளிக்கும் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த தளபதியே - விஜய் போஸ்டரால் பரபரப்பு

மதுரையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்காக அவரது ரசிகர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிறப்புவதாகக் கூறிக்கொண்டு ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் களமிறங்கியுள்ளனர்.
 
இந்நிலையில் நடிகர் விஜய் வரும் 22ந்தேதி, அவரது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதனையொட்டி மதுரையில் நகரின் முக்கிய பகுதிகளில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சி.
 
ஏனென்றால் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருக்கும் வாக்கியம் அப்படி அமைந்திருந்தது. அதில் தமிழர்களின் போராட்டம் தொடர்கதை. எங்கள் தளபதி அதை மாற்றிடுவார். வருங்கால முதல்வரே, விவசாயிகளின் தோழரே, தத்தளிக்கும் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த தளபதியே என்றெல்லாம் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. 
இதேபோல் கடந்த மே மாதம் அஜித் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்களும் இதேபோன்று போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.