திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2018 (17:58 IST)

ரஜினியின் ‘காலா’ படத்தில் பாடிய விஜய் பிரகாஷ்

பிரபல பின்னணிப் பாடகரான விஜய் பிரகாஷ், ரஜினியின் ‘காலா’ படத்தில் பாடியுள்ளார்.

 
கமல்ஹாசனின் ‘அன்பே சிவம்’ படத்தில் இடம்பெற்ற ‘பூ வாசம் புறப்படும் கண்ணே’ பாடலின் மூலம் தமிழில் பின்னணிப் பாடகராக அறிமுகமானவர் விஜய் பிரகாஷ். ‘ஓம் சிவோஹம்’ (நான் கடவுள்), ‘காதல் அணுக்கள்’ (எந்திரன்), ‘இன்னும் கொஞ்ச நேரம்’ (மரியான்), ‘ஓடே ஓடே’ (ராஜா ராணி) உள்பட ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
 
தற்போது இவர் சந்தோஷ் நாராயணன் இசையில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்துக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார். பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படம், ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஹுமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டில், சுகன்யா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது.