வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (13:45 IST)

ரஜினியை அடுத்து விஜய்க்கு ஏற்பட்ட இண்டர்நெட் சோதனை

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆன தினத்தன்றே இணையதளங்களில் லீக் ஆவது என்பது பழைய ஸ்டைல். தற்போது படம் வெளிவருவதற்கு முன்பே அந்த படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆவது தான் புது டிரெண்ட்

இந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் 14 வினாடிகள் சண்டைக்காட்சிகள் இணையதளங்களில் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதே இண்டர்நெட் சோதனை தற்போது விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்திற்கு ஏற்பட்டுள்ளது.

'தளபதி 62' படத்தில் மொட்டை மாடி ஒன்றில் விஜய், ஸ்டண்ட் நடிகர்களுடன் மோதும் 10 வினாடி காட்சியின் வீடியோ க்ளிப் ஒன்று தற்போது இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ், கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தும் இந்த காட்சிகள் எப்படி லீக் ஆகியது என்று படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.