செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (18:18 IST)

இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?

அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் மெட்ராஸ் படத்தின் மூலம் பிரபலமாகி ரஜினியின் கபாலி, காலா என அடுத்தடுத்த இரண்டு படங்களை இயக்கும் பெரும் வாய்ப்பை பெற்றவர் இயக்குனர் பா.ரஞ்சித்

இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கு 'பரியேறும் பெருமாள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். கதிர், ஆனந்தி, கலையரசன் உள்பட பலர் நடிக்கும் இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.