1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (20:53 IST)

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கம்

vijay makkal iyakkam
நடிகர் விஜய், சினிமாவில் நடித்து வருவதுடன் விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளதாகவும், இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினரால் தமிழகம் முழுவதும் விஜய் பயிலகம், விஜய் நூலக, விஜய் மருந்தகம், இலவச சட்டஆலோசனை மையம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.

விஜய் நூலகம் மற்றும் பயிலகம் தமிழகம் முழுவதும் திறக்கப்பட உள்ள நிலையில், விலையில்லா ஊட்டச்சத்து உணவு திட்டத்தின் மூலம் உணவு மற்றும் சத்தான பழங்கள் இன்று வழங்கப்பட்டது.!

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் கூறியுள்ளதாவது:

தளபதி  அவர்களின் சொல்லுக்கிணங்க, தஞ்சைதெற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, பட்டுக்கோட்டை, ஏனாதி, கரம்பயம் மற்றும் நம்பிவயல் ஆகிய 4 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகைபுரிந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு விலையில்லாஊட்டச்சத்துஉணவு திட்டத்தின் மூலம் உணவு மற்றும் சத்தான பழங்கள் வழங்கப்பட்டது.!  என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தளபதி  அவர்களின் சொல்லுக்கிணங்க, திண்டுக்கல்கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் திண்டுக்கல் R.M.காலனி/ஆத்தூர்/நிலக்கோட்டை/வத்தலக்குண்டு/நத்தம் இளைஞரணி சார்பாக 5 இடங்களில்,

விலையில்லா #ரொட்டி_பால்_முட்டை வழங்கும் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.!  என்று தெரிவித்துள்ளனர்.