குழந்தைகளுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், தற்போது விஜய்68 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். யுவன் இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
நடிகர் விஜய், சினிமாவில் நடித்து வருவதுடன் விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளதாகவும், இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கலில் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
சமீபத்தில், மாணவர்களுக்கு இலவச விஜய் நூலகம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், விஜய்யின் சொல்லுங்கிணங்க, அவரது மக்கள் இயக்கத்தின் சார்பில் நேற்றுத் தமிழகத்தில் உள்ள திருச்சி , வேலூர், காரைக்குறிச்சி, அரியலூர் ஆகிய பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு மக்கள் இயக்கத்தினர் பால் மற்றும் ரொட்டி மற்றும் முட்டை வழங்கினர்.
இந்த நிலையில், இன்று நடிகர் விஜய்யின் சொல்லுங்கிணங்க மதுரை மாவட்டத்தில் மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருப்பரங்குன்றம் கீழத்தெரு, திரு நகர், மஹாலட்சுமி நகர், அவனியாபுரம் 100 வது போர்டு, பொன்மேனி 69 வது வார்டு புரம் புது மீனாட்சி நகர் 44வது வார்டு, தெப்பகுளம் 42 வது வார்டு சார்பாக குழந்தைகளுக்கு ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டத்தின் மூலம் வழங்கியதாக அதிகாரப்பூர்வமாக பதிவிட்டு புகைப்படமும் பகிர்ந்துள்ளனர்.
இதற்கு, விஜய் மக்கள் இயக்கத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.