வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (09:42 IST)

தொடரும் பாலிவுட் சோகம்… டல் அடிக்கும் ரண்வீர் சிங்கின் “சர்க்கஸ்” வசூல்!

சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரண்வீர் சிங் நடித்த சர்க்கஸ் திரைப்படம் வெளியானது.

இந்த படத்தை பாலிவுட்டின் கமர்ஷியல் கிங் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி இருந்தார். இந்த படத்தில் முதல் முறையாக ரண்வீர் சிங் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பண்டிகை நாளில் வெளியான போதும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு இல்லை என்று சொல்லப்படுகிறது.

100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் முதல் 3 நாட்களில் சுமார் 20 கோடிக்கும் குறைவாகவே வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் படுதோல்வி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.