வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (07:48 IST)

விஜய் மல்லையா வாழ்க்கை வரலாறு வெப்சீரிஸ்: பரபரப்பு தகவல்

தற்போதைய கொரோனா நேரத்தில் திரைப்படங்கள் தயாரிப்பதை விட வெப்சீரிஸ் தயாரிப்பதில் முன்னணி இயக்குநர்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த வெப்சீரிஸ்களில் முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏற்கனவே பல முக்கிய பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது இந்தியாவின் முன்னணி தொழில் அதிபராக இருந்து அதன் பின்னர் இந்திய வங்கிகளின் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவின் வாழ்க்கை வரலாறு வெப்சீரிஸ் ஆக தயாரிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது 
 
இந்த வெப்சீரிஸ் முன்னணி ஓடிடி தளத்திற்காக தயாரிக்க இருப்பதாகவும், ‘தி விஜய் மல்லையா ஸ்டோரி\ என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்த வெப்சீரிஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வெப்சீரிஸ் குறித்த ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இதனை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது.
 
மேலும் விஜய் மல்லையா கேரக்டரில் பழம்பெரும் நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாகவும், மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த வெப்சீரிஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது