செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (13:55 IST)

அரசியல் கட்சிகள் போல அதிரடி நீக்கம்: பரபரக்கும் விஜய் மக்கள் மன்றம்!!

திருச்சி மாநகரம் விஜய் மக்கள் மன்றத்தின் மாவட்ட தலைவராக இருந்த ஆர்.கே.ராஜா அதிரடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 
 
கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் திருச்சி மாநகரத்தின் விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவராக இருந்த ஆர்.கே.ராஜா அதிரடியாக அந்த பதிவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதோடு, அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 
 
கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர் விஜய் மக்கள் இயக்கத்தின் கட்டுப்பாடு, கண்ணியத்திற்கு எதிராக செயல்பட்டதாக  கூறி நடிகர் விஜய் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். 
 
இந்த அறிவிப்பினை விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் பெயரில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.