செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 13 ஜூன் 2020 (22:20 IST)

55 வருடங்களுக்கு முன்பு வசித்த வீட்டில் முன்னால் போட்டோ எடுத்த நடிகர்….

தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என்று அழைக்கபடும் நடிகர் சிவக்குமார். இவர் 55 ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்னையில் வசித்த வீட்டின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சிவக்குமார் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன் ஓவியக் கல்லூரியில் படித்து சில காலம் ஓவியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில்  சிவக்குமார் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், 1958 முதல் 1965 வரை மாதம் ரூ.15 வாடகை கொடுத்து வாழ்ந்த வீடுதான் அது.

அந்த வீட்டில் அவர் 7 ஆண்டுகளாக தங்கியிருந்தாகவும், அப்போது குறைந்த வருமானத்துடன் உயந்த லட்சியத்துடன் வாழ்ந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 7 ஆண்டுகள் நான் அந்த வீட்டில் வாழ்ந்த போதுதான் பெரும்பாலான ஓவியங்களை தீட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.