கவர்ச்சிக்கு நோ; அதற்கு ஓகே: கதிகலங்க வைத்த நித்யா மேனன்...

Last Updated: செவ்வாய், 23 ஜனவரி 2018 (21:49 IST)
நடிகை நித்யா மேனன் தான் நடிக்கும் படங்களை சிறந்த கதாப்பாத்திரமாக தேர்வு செய்து நடிப்பவர். தற்போது, அவர் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அன்று முதல் இன்று வரை அப்படியே இருப்பவர். தற்போது தெலுங்கு படமொன்றில் நடிகைகள் ஏற்க தவிர்க்கும் கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.


நானி தயாரிப்பில், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா ஆகியோர் நடிக்கும் படம் அவே. இந்த படத்தில் ரெஜினா போதைக்கு அடிமையான பெண்ணாய் நடித்துள்ளார் என சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியது.

தற்போது, நித்யா மேனனின் கதாப்பாத்திரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆம் நித்யா மேனன் ஓரினச்சேர்க்கையாளராக நடித்துள்ளாராம். மேலும் சக நடிகையுடன் லிப் டூ லிப் காட்சியில் வேறு நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :