திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 29 செப்டம்பர் 2018 (10:46 IST)

நானே கவலைப்படல... உங்களுக்கு என்ன பிரச்சினை? நித்யா மேனன் கோபம்

வெப்பம், காஞ்சனா–2, இருமுகன், 24, மெர்சல்  உள்பட பல படங்களில் நடித்தவர் நித்யா மேனன்.  தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'தி அயர்ன் லேடி' என்ற படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில் நித்யா மேனன் உடல் எடை கூடி குண்டாக இருப்பதாகவும், அதனால் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் பேசி வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு நித்யா மேனன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:–

‘‘எனது உடல் எடை பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்கிறார்கள். இதற்கு நான் பதில் சொன்னாலும், சொல்லாமல் போனாலும் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எனக்கு  உடல் எடை கூடியது பற்றி  கவலை இல்லை. அதுபற்றி நானே கவலைப்படாதபோது மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை?. அவர்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்?.

என்னுடைய எடையை குறைக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தால், அதற்கு ஒரு மாதம் போதும். பழைய கதாநாயகிகள் அனைவரும் குண்டாகத்தான் இருந்திருக்கிறார்கள். அதற்காக தயாரிப்பாளர்கள் படங்கள் தயாரிப்பதை நிறுத்தவா செய்தார்கள்? சினிமாவில் நடிப்புதான் முக்கியம், உடல் எடை முக்கியம் இல்லை. உடல் எடையை குறைத்தால்தான் படங்களில் நடிக்க முடியும் என்று யாராவது விரும்பினால் அந்த படங்கள் எனக்கு தேவை இல்லை.’’ இவ்வாறு நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.