புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2018 (21:48 IST)

ஹீரோவுக்கு ஃபிளையிங் கிஸ்: நித்யா மேனன் கலக்கல்....

நடிகை நித்யா மேனன் தான் நடிக்கும் படங்களை சிறந்த கதாப்பாத்திரமாக தேர்வு செய்து நடிப்பவர். தற்போது, அவர் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
 
தமிழில் ஓகே கண்மணி, முடிஞ்சா இவன பிடி, இருமுகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார். அதில் நானி தயாரிப்பில் அவர் நடிக்கும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 
 
வழக்கமாக நித்யா மேனன் அதிகம் பேசாதவர். ஆனால், இந்த நிகழ்ச்சியில் நித்யாமேனன் நானியை வாழ்த்தி பேசினார். நானிக்கு வாழ்த்தெல்லாம் போதாது. எனவேதான் இந்த பரிசை தருகிறேன் என்று யாரும் எதிர்பாராதவிதாக ஃபிளையிங் கிஸ் அளித்தார்.