செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (15:38 IST)

புள்ளிங்கோ பாடலுக்கு குவியும் பாராட்டு... நடிகர் சிம்பு நெகிழ்ச்சி !

புள்ளிங்கோ பாடலுக்கு குவியும் பாராட்டு... நடிகர் சிம்பு நெகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நடிகர்கள் பெரும்பாலும் நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தனுஷ் , விஜய் , சிம்பு உள்ளிட்ட நடிகர்களுக்கு சினிமாவில் இருக்கும் அத்தனை துறையும் அத்துப்படி என்றே சொல்லாமல்.
 
ஆம், இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள ஒரு குட்டி கத என்ற பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் சாதனை படைத்தது வருகிறது. உடனே தற்போது விஜய்க்கு போட்டியாக நடிகர் சிம்பு 'இரும்பு மனிதன்' படத்துக்காக பாடியுள்ள "Don't worry Pullingo" என்ற பாடல் வெளியாகியுள்ளது.
 
டிஸ்னி இயக்கியுள்ள 'இரும்பு மனிதன்' என்ற இப்படத்தின் இந்த பாடலை நிரஞ்சன் பாரதி எழுதியுள்ளார். கே.எஸ்.மனோஜ் இசையமைத்துள்ளார். ஷங்கர் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இந்த ஒரு பாடலால் நல்ல ரீச் அடையும் என எதிர்பார்க்கப்பட்டது போன்று எல்லா தரப்பினரிடையே இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
அதில், ’துட்டெல்லாம் போனாலும் தூசா ஆனாலும் நம்பிக்கை விடாம வாழ்ந்து பாருங்கோ என்ற வரிகளை நிரஞ்சன் பாரதி எழுத இசையும் பக்க பலமாக அமைய அனைவரின் வாயிலும் பாடலை முனுமுனுக்க வைத்துள்ளது.
 
இதுகுறித்து சிம்பு கூறியுள்ளதாவது, நிறைய ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் தங்களின் வாழ்த்துகளை எனக்கு தெரிவித்து பாராட்டி வருவது இதே போன்ற பாடல்களை பாட எனை உற்சாகப்படுத்துகிறது என சிம்பு கூறியுள்ளார்.