இந்த வாரம் ரிலீசிற்கு வரிசை கட்டி நிற்கும் ஏழு தமிழ் படங்கள்..!

Last Updated: செவ்வாய், 23 ஜூலை 2019 (14:39 IST)
வார இறுதியில் என்னென்ன படங்ககள் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் முழுக்க வரப்பிரசாதமாக அமையவுள்ளது. 


 
வருகிற ஜூலை 26ம் தேதி ஏ1, டியர் காம்ரேட், கொலையுதிர் காலம், கொளஞ்சி, நுங்கம்பாக்கம், சென்னை பழனி மார்ஸ், ஆறடி என ஏழு தமிழ்ப்படங்கள் வெளியாகவுள்ளன.
 
இதில் நயன்தாராவின் கொலையுதிர் காலம், விஜய் தேவர்கொண்டாவின் டியர் காம்ரேட், சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள ஏ1 உள்ளிட்ட படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுவாதி கொலை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள "நுங்கம்பாக்கம்" படத்திற்கு புதுவரவு கிடைக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 
 
எனவே நிச்சயம் உங்களுக்கு இந்த வாரம் நல்ல வீக் என்டாக அமையும். ஆகவே குடும்பத்துடன் திரைக்கு சென்று கண்டுகளியுங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :