வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam

முடிந்தது மெர்சல்: பார்சிலோனாவுக்கு பறந்த விஜய்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த வந்த 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிந்ததை அடுத்து ஓய்வு எடுப்பதற்காக விஜய் பார்சிலோனாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



 
 
இன்று விஜய் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படமும் அவருடைய விமான டிக்கெட்டின் புகைப்படமும் சமூக இணையதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.
 
சில நாட்கள் பார்சிலோனாவில் தங்கி ஓய்வு எடுக்கும் விஜய் பின்னர் தீபாவளிக்கு முன்னர் சென்னை திரும்பி 'மெர்சல்' படத்தின் புரமோஷன்களில் கலந்து கொள்வார் என்றும், அதன் பின்னர் தீபாவளி முடிந்தவுடன் அவர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது
 
விஜய் குடும்பத்தினர் ஏற்கனவே பார்சிலோனாவில் உள்ளனர் என்றும் அவரது நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன