1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (23:23 IST)

'சாமியார்' ஆகிறார் இயக்குனர் மிஷ்கின்

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றி நடை போட்டு வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தொடங்கப்படும் என்று விஷால் அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்தார்.



 
 
இந்த நிலையில் 'ஆரண்ய காண்டம்' தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் மிஷ்கின் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு சாமியார் வேடமாம். சமீபத்தில் இந்த கேரக்டருக்கான மேக்கப் டெஸ்ட்டில் மிஷ்கினுக்கு சாமியார் வேடம் மிகச்சிறப்பாக பொருத்தமாக இருந்ததாம்
 
இந்த படத்தில் விஜய்சேதுபதி ஷில்பா என்ற பெண் கேரக்டரில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் பகத்பாசில், நதியா, சமந்தா, காயத்ரி, பகவதிபெருமாள் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.