1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 16 செப்டம்பர் 2017 (18:16 IST)

இவர் இடத்தை நிரப்ப எவருண்டு; விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் மெர்சல். இதில் விஜய் வித்தியாசமாக மூன்று வேடத்தில் நடித்திருக்கிறார்.


 
 
இந்த படத்தின் டீஸருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர், இதனால் மெர்சல் பீவர் என்ற ஹாஸ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்தும் வெளிப்படுத்தி வருகின்றனர். விஜய் தற்போது மெர்சல் படத்தின் ரிலிஸில்  பிஸியாகவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகவுள்ளார்.
 
இந்நிலையில் விஜய் நடிப்பு தாண்டி அரசியல் களத்திற்கும் வருவார் என கிசுகிசுக்கப்படுகின்றது. இது ஒருபுறம் இருக்க மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில்எம்.ஜி.ஆர் இடத்தை நிரப்ப யாருண்டு தளபதியை தவிர வேற எவருண்டு என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் இப்போஸ்டர் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த போஸ்டரின் பிண்ணனியில் அவரின் அரசியல் பிரவேசம் உள்ளதா? என்ற கேள்வி மக்களிடையே பரவியுள்ளது.