திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (20:51 IST)

ஷங்கர், மணிரத்னத்துடன் விஜய் பட இயக்குநர் பிறந்தநாள் கொண்டாட்டம் !

லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை பிரபல இயக்குநர்களுடன் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

மாநகரம்,கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் 100 நாட்களைத் தாண்டி ஓடிக்கொண்டுள்ளது.

இந்நிலையில், அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை அவர் இயக்கவுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை மணிரத்னம், கெளதம்மேனன், ஷங்கர், சசி,வசந்தபாலன்,லிங்குசாமி உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து கொண்டாடினார். . இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.