வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (15:12 IST)

கமல் நடிக்க வேண்டிய எந்திரன் திரைப்படம்… ட்ராப் ஆனது ஏன் தெரியுமா?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் மற்றும் பிரீத்தி ஜிந்தா நடிப்பில் 1998 ஆம் ஆண்டு ரோபோ திரைப்படம் உருவாக இருந்தது.

தமிழ் சினிமாவின் அரும்பெரும் சாதனைகளில் ஒன்றாக மிகப்பெரிய வணிக வெற்றி பெற்ற திரைப்படமாக எந்திரன் இன்றும் இருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தை ஷங்கர் இயக்கி  இருந்தார். இந்த திரைப்படம் ஏற்கனவே கமல் மற்றும் பிரீத்தி ஜிந்தா நடிப்பில் உருவாக இருந்து பிரம்மாண்டம் காரணமாக பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.

ஆனால் இப்போது அந்த படத்தில் பணியாற்றிய ஒரு உதவி இயக்குனர் படம் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து பேசியுள்ளார். அதில் ‘இந்த படத்தை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரிக்க முன்வந்தது. ஆனால் இயக்குனர் ஷங்கர் கொடுத்த பட்ஜெட்டைக் கேட்டு தயங்கி தயங்கி காலதாமதம் செய்தனர். இதனால் ஒரு கட்டத்தில் கமல் பிற படங்களில் நடிக்க கமிட்டாகி சென்றுவிட்டார். அதனால் படம் கைவிடப்பட்டது’ எனக் கூறியுள்ளார்.