1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (15:33 IST)

சித்தார்த் நடிகராக அந்த எழுத்தாளர்தான் காரணமாம்!

நடிகர் சித்தார்த் தென்னிந்திய மொழிகளில் உள்ள திறமையான நடிகர்களில் ஒருவர்.

தமிழ் சினிமாவுக்கு பாய்ஸ் படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். அதற்கு முன்னதாக அவர் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். பாய்ஸ் படத்துக்காக ஷங்கர் 5 இளைஞர்களை தேடிக் கொண்டிருந்த போது அந்த படத்தின் வசனகர்த்தா சுஜாதாதான் சித்தார்த்தை பற்றி சொல்லி ஷங்கரிடம் அனுப்பி வைத்தாராம். அதன் பின்னரே அவர் ஆடிஷனில் கலந்துகொண்டு அந்த படத்தில் கதாநாயகனானார். அதற்கு முன்னதாக ஷங்கரின் உதவி இயக்குனர்கள் பரத்தைதான் கதாநாயக வேடத்துக்கு தேர்வு செய்திருந்தார்களாம்.