திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 மார்ச் 2021 (17:50 IST)

ஷங்கர் படத்தில் இருந்து கழட்டி விடப்பட்ட அனிருத்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தில் இருந்து அனிருத் கழட்டிவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் கம்மியாம். ரூ 170 கோடி ரூபாய் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்குப் பிறகே தொடங்க உள்ளதாம். இடையில் ராம் சரண் தனது ஆர் ஆர் ஆர் படத்தை முடிக்கவும், ஷங்கர் தனது மகளின் திருமணத்தை முடிக்கவும் முன்னுரிமைக் கொடுக்க உள்ளார்களாம். 

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இருந்து அனிருத் கழட்டிவிடப்பட்டு இப்போது ஷங்கரின் ஆஸ்தான இசையமைபபாளரான ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.