வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 ஜூலை 2023 (21:06 IST)

கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய விஜய் பட நடிகர்!

Sudeep
கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 9 வயது சிறுமி சாக்ஷியை நேரில் சந்தித்து சிறுமியின் ஆசையை நிறைவேற்றினார் நடிகர் கிச்சா சுதீப்.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப். இவர், இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் பாடகர் என பன்முக கலைஞராக இருக்கிறார்.

இவர், விஜயுடன் இணைந்து புலி படத்திருந்தார். இந்த  நிலையில்,  3 ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சாக்ஷி என்ற மாணாவி மெட்டாஸ்டேடிக் அல்லாத அஸ்டியோசர்கோமா எனும் கேன்சரால் பாதிகப்பட்டுள்ள நிலையில் அவர் பெங்களூரு சாம்ராஜபேட்டையில் உள்ள சரி சங்கரா புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்  நடிகர் சுதீப்பை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.  சிறுமியின் ஆசையைப் பற்றி அறிந்த சுதீப், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றினார்.

நடிகர் சுதீப்பை சந்தித்ததில் சிறுமி சாக்ஷி உற்சாகம் அடைந்துள்ளார்.

https://sharechat.com/post/d91a0yEE?referrer=copyLink