1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 10 டிசம்பர் 2022 (18:21 IST)

சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தும் விஜய்!

arabic kuthu
தமிழ் சினிவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் இருவருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி இருந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் இருவரின் ரசிகர்களும் இதுகுறித்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், அஜித், விஜய்ட் இருவரின் பாடல்களில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற பாடல்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வலிமை படத்திற்கு பின் துணிவு படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.  இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுதினார், அனிருத் பாடியிருந்தார்..

இப்பாடல்  நேற்று  மாலை 6:30க்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததன்படி, #ChillaChilla  பாடல் ஜீ ஸ்டுடியோஸ் யூடியூப் பக்கத்தில் வெளியாகி இணையதளத்தில் வைரலானது.
 

துணிவு படம் ஜிப்ரானின் 50 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

#ChillaChilla  என்ற துணிவு பட முதல் சிங்கில் பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதைப் படக்குழு மற்றும் ரெட்ஜெயிண்ட் படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வரும் பொங்கல் அன்று விஜய்யின் வாரிசுடன் இப்படம் மோதவுள்ளது.

இந்த நிலையில், ஏற்கன்வே  விஜய்யின் பீஸ்ட் படப் பாடல் அரபிக் குத்து 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களையும், ரஞ்சிதமே 18 மில்லியன் பார்வையாளர்களையும்,  தீ தளபதி 12 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுள்ளதால், சமூக வலைதளங்களில் விஜய் ஆதிக்கம் செலுத்தி வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.