பிரபல நடிகருக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த விஜய்! வைரல் புகைப்படம்
காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு விஜய் சர்ப்பிரைஸ் கிப்ட் வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு இவர், அரண்மனை, பரியேறும் பெருமாள், பீஸ்ட், வலிமை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நிலையில், கூர்க்கா, மண்டேலா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
தற்போது, யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த தாதா என்ற திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட யோகிபாபுவுக்கு நடிகர் விஜய், ஒரு கிரிக்கெட் பேட் ஒன்றைய பரிசாக வாங்கியுள்ளார்.
இதுகுறித்து, யோகிபாபு தன் டுவிட்டர் பக்கத்தில், எனக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
Edited By Sinoj