யோகி பாபுவுக்கு கிப்ட் கொடுத்த விஜய்… டிவிட்டரில் பகிர்ந்த மகிழ்ச்சி!
யோகி பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார். அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
சினிமா மட்டும் இல்லாமல் யோகி பாபு ஆர்வமாக இருக்கும் துறை கிரிக்கெட். பல ஷூட்டிங் ஸ்பாட் தளங்களில் அவர் படக்குழுவோடு கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன.
இந்நிலையில் இப்போது கையில் பேட் உடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், கையில் இருக்கும் அந்த பேட்டை பரிசாக அளித்தது நடிகர் விஜய் எனக் குறிப்பிட்டுள்ளார்.