திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 4 அக்டோபர் 2018 (21:46 IST)

தென் மாநிலங்களில் பலத்த அடி வாங்க காத்திருக்கும் பாஜக! சர்வே முடிவு

வரும் பாராளுமன்ற தேர்தலில் தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பலத்த பின்னடைவு ஏற்படும் என ஏபிபி என்ற தனியார் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி? என்ற கருத்துக்கணிப்பை நடத்திய ஏபிபி நிறுவனம் தற்போது அதன் முடிவை அறிவித்துள்ளது.

இதன்படி தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா என ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து பாஜகவுக்கு வெறும் 21 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என சர்வே கூறுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்க வாய்ப்பு இல்லையாம். நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம் உள்பட பல திட்டங்கள் மக்களின் எண்ணங்களுக்கு விரோதமாக நடத்தப்படுவதே இந்த பின்னடைவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் வட மாநிலங்களில் பாஜகவுக்கு இன்னும் அதிக செல்வாக்கு இருப்பதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.