”அந்த படத்தை நான் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை”..விஜய் ஆவேசம்

Last Updated: செவ்வாய், 16 ஜூலை 2019 (18:03 IST)
இந்தியில் வெளியான கபீர் சிங் திரைப்படத்தை பார்த்தீர்களா? என கேட்டதற்கு, அந்த படத்தை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என பதில் அளித்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படம், அர்ஜூன் ரெட்டி. இந்த திரைப்படம் எதிர்பாராத விதமாக இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் இந்தி ரீமேக்கான ”கபீர் சிங்” சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி நடைபோட்டது. இந்நிலையில் ”கபீர் சிங்” திரைப்படத்தைப் பார்த்தீர்களா? என்று விஜய் தேவரகொண்டாவிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் நிருபர்களால் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, அந்த படத்தில் ஷாகித் கபூர் நடித்துள்ளது தெரியும் என்றும், அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் தான் நடித்துள்ளதால் கபீர் சிங் திரைப்படத்தை தான் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு கபீர் சிங்கின் கதை நன்றாகத் தெரியும் என்றும், ஆதலால் அந்த திரைப்படத்தை என்னால் பார்க்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.

 இதில் மேலும் படிக்கவும் :