லிப் லாக்கே சாட்சி: காதலில் விழுந்த ப்ரேக் அப் நடிகை!!

Last Updated: வெள்ளி, 22 மார்ச் 2019 (21:08 IST)
ஆர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சென்சேஷ்னல் நடிகராக் மார்ய நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து வெற்றி படங்களையும் கொடுத்து வருகிறார். 
இந்நிலையில் இவரின் அடுத்த படத்தின் டீசரும் வெளியானது. மிஸ்டர் காம்ரேட் என்ற இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் தயாராகி வருகிறது. 
 
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். இவர்கள் இருவரும் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தபோது காதல் என கிசு கிசுக்கப்பட்டது. 
இப்போது இந்த படத்தின் டீசரை பார்த்த பின்னர் இவர்களது காதல் உண்மை எனவே கூறப்படுகிறது. ஏனெனில் அர்ஜுன் ரெட்டி படத்திலும் லிப் லாக் நெருக்கமான காட்சிகள் பல இருந்தது, ஆனால் இவர்களது நெருக்கம் அதிகமகவே உள்ளது என டோலிவுட் கிசுகிசுக்கிறது. 
 
மேலும், விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவுக்கு சிபாரிசு செய்வதாகவும் கூறப்படுகிறது. இருவரை பற்றி வரும் கிசுகிசுக்களை இவர்கள் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா ஏற்கனவே தனக்கு நடந்த திருமண நிச்சயத்தை நிறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :