ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2019 (13:00 IST)

‘ரவுடி’ ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த விஜய்!

ரசிகர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென விஜய் தேவரகொண்டா அறிவுறுத்தியுள்ளார் .


 
'அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா, டாக்ஸிவாலா போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 
 
டாக்ஸிவாலா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியானது.  இருந்தும்  அப்படம் வெளிவந்ததும் சூப்பர் ஹிட் செய்யவைத்தனர் விஜய்தேவர்கொண்டவன் ரசிகர்கள். இதனால் தன் ரசிகர்கள் மீது அளவுக்கடந்த அன்பு வைத்துள்ளார். 
 
விஜய் தேவரக்கொண்டா நடிப்பையும்  தாண்டி ‘ரௌடி’ என்னும் பெயரில்  ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த பிராண்டின் லோகோ ரௌடி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு குறுக்கே ஒரு கோடு போடப்பட்டிருக்கும். 
 
சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் இருவர்,  பைக் நம்பர் பிளேட்டில் நம்பர் ஒட்டாமல், இந்த லோகோவை ஒட்டியிருக்கின்றனர். அதை பார்த்த போலீஸார் அவர்களை கையும் களவுமாக பிடித்ததையடுத்து இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
 
இதனால் சமீபத்தில் ட்வீட் செய்த விஜய் , “நீங்கள் ரவுடி என்ற அடைமொழி வைத்திருப்பதைப் பார்த்தாலே, உங்களை என் குடும்பத்தில் ஒருவராக நினைத்துவிடுவேன். என் குடும்பத்தில் இருக்கும் எவருக்கும் நான் சொல்வதைப் போல சொல்கிறேன், பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
 

 
சில விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். அவை நம் நலனுக்காகத்தான். நானும் அவற்றைப் பின்பற்றுகிறேன். குடும்பமோ, நண்பரோ, கடவுளோ... யார் மீதான அன்பாக இருந்தாலும் பைக்கில் எங்கு வேண்டுமானாலும் காட்டுங்கள். ஆனால், நம்பர் ப்ளேட்டில் நம்பர் மட்டுமே இருக்கட்டும். அன்புள்ள உங்கள் ரவுடி தோழர் விஜய் தேவர்கொண்டா” எனத் தெரிவித்துள்ளார்.
 
இதை பார்த்த அவரது ரசிகர்கள் இந்தச் செயலால் அவர் மீதான அன்பு இன்னும் அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளனர். தன்னுடைய ரசிகர்களை விஜய் தேவரகொண்டா ரௌடி என்றுதான் அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.