இந்திய அணியில் பீல்டிங் பயிற்சிக்கு விண்ணப்பித்த முன்னாள் ஹீரோ : யார் தெரியுமா ?

jandy rhodes
Last Modified புதன், 24 ஜூலை 2019 (21:01 IST)
தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தலைசிறந்த பீல்டராக முத்திரை பதித்து 90ஸ் கிட்ஸின் மனசில் ஹீரோ போன்று நீங்கா இடம் பிடித்தவர் ஜாண்டி ரோட்ஸ். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங்,பீல்டிங் , பந்து வீச்சு ஆகிய பயிற்சியாளர்களின் பதவிக்காலம் உலகக்கோப்பையுடன் முடிவடைந்தது .இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர் காரணமாக அடுத்த 45 நாட்களுக்கு அவர்களின் பதவிக்கால நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
எனவே தற்போது இம்மூன்று பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று பிசிசிஐ இணையதளத்தில் அதிகாரப்பூர்வமால அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில் இப்பதவிக்கு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீர ஜான்டிரோட்ஸ் பீல்டிங் பயிற்சிக்காக விண்ணப்பித்துள்ளார்.ஒருகாலத்தில் மனித சுவர் என்று அழைக்கப்பட்ட இவர் கடந்த 2017 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டியில் மும்மை இந்தியன்ஸ் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :