ரிலிஸுக்கு முன்பே இந்தியில் விற்பனை ஆன டியர் காம்ரேட் கதை !

Last Modified புதன், 24 ஜூலை 2019 (09:07 IST)
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை இயக்குனர் கரன் ஜோஹர் பெற்றுள்ளார்.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஹிட் ஜோடியின் இரண்டாவது படமாக டியர் காம்ரேட் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்தப்படம் ரிலிஸாவதற்கு முன்பாகவே இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இந்தி இயக்குனர் கரன் ஜோஹர் வாங்கியுள்ளார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஏற்கனவே வெளியான பெல்லி சூப்லு மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகியப் படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :